முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவாலப்பர் கோவில் ஊராட்சியில் 7.50 லட்சம் குடிநீர் தேக்க தொட்டி அமைப்பு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் உள்ள 327 குடும்பங்களில் வசிக்கும் 864 பொது மக்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியில் ஏற்பட்டிருந்த இடைவெளியினை நிரப்பும் விதத்தில் அந்த கிராமத்திற்கு குடிநீர் போதுமான அளவில் எல்லா நாள்களில் கிடைத்திடவும், இந்த ஊரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் வீர நாராயண பெருமாள் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் குடிநீர் தேவைகளை அனைத்து வழிகளிலும் நிறைவடையச் செய்திடவும் வேண்டி பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஊராட்சியில் வீருநாராயணப் பெருமாள் கோவில் அருகில் ஊரக வளர்ச்சித் துறையின் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி 2016-17 திட்டத்தின் மூலம் ரூபாய் 7.50 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கினார்கள். இதனையடுத்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் மூலம் இப்பணி குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்