முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண நிதியுதவி: மதுரை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      மதுரை
Image Unavailable

 

மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற விழாவில் சமூக நலத்துறையின் சார்பில் 789 ஏழைப்பெண்களுக்கு திருமணத்திற்கு 4 கிராம் தங்கமும், திருமண நிதியுதவி தொகையாக தலா ரூ.50,000 என மொத்தம் ரூ.4.26 கோடி மதிப்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், வழங்கினார்;.

 

 

 

 

 

 

 

 

 

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:

 

 

 

 

 

 

 

 

 

தமிழ்நாடு அரசு தமிழகத்தை அனைத்து வழிகளிலும் நல்வழிப்படுத்தி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு செல்கின்ற வகையில் பல்வேறு நலத்திட்டங்களை குறிப்பாக பெண்களின் பெயரிலேயே வழங்கி வருகிறது. பெண்களின் கல்வி நிலையை உயர்த்துவதோடு, ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவிடும் வகையில் 4 கிராம் தங்கத்தினை 8 கிராம் தங்கமாக உயர்;த்தி வழங்கப்பட்டு வருகிறது. பெண் சிசுக்கொலை தடுப்பு, பெண் கமாண்டோ படை, மகளிர் சுயஉதவிக்குழு என பெண்கள் நலம் சார்ந்த திட்டங்களை தீட்டி பெண் சமுதாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

 

கணவன் மற்றும் மகனிடம் கைசெலவுக்காக பெண்கள் கையேந்திய காலம் மாறி மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி, அதன்மூலம் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்தி கொண்டுள்ளனர். இதுவரை மதுரை மாவட்டத்தில் 47,875 பெண்களுக்கு ரூ.54 கோடி மதிப்பில் தலா 4 கிராம் தங்கமும், ரூ.190 கோடி திருமண நிதியுதவி தொகையும் என மொத்தம் ரூ.244 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், திருமண நிதியுதவியாக பட்டயப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது என தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago