முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமன் ஜெயந்தி விழா:41 அடி உயர பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,08,000 வடைமாலை அணிவிப்பு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      சென்னை
Image Unavailable

அம்பத்துர்,

 

தமிழகத்தில் பிரசித்திபெற்ற திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீநவக்கிரகநாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோயில் ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7-எச் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அருள்புரிந்து வரும் 41அடி உயர ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,08,000 (ஒரு இலட்;;சத்து எட்டாயிரம்) வடைமாலை அணிவித்து 7-ம் ஆண்டு அனுமன்ஜெயந்தி விழா 29.12.2016 வியாழக்கிழமை நடைபெற்றது. விழா அன்று காலை 8-மணிக்கு சிறப்பு ஹோமமும், 10-மணியளவில் சிறப்பு அபிN~கமும், நண்பகல் 12.30 மணியளவில் அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் 41அடி உயர ஆஜானுபாகு ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு பட்டு அங்கவஸ்திரம், பூமாலை, வெற்றிலைமாலை, துளசிமாலை, லட்டுமாலை, ஜாங்கிரிமாலை, தேங்காய் மாலை, வாழைப்பழமாலை, மற்றும் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் (1இ08இ000) வடைமாலையும் அணிவித்து மகாதீபாரதணையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்