சிறப்பு கைத்தறி எக்ஸ்போ கண்காட்சி மற்றும் விற்பனையை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      மதுரை
handloom expo(N)

மதுரை - மதுரை கே.கே.நகர் வி.பி.வேலாயுத நாடார் - ராஜலட்சுமி கல்யாண மண்டபத்தில் இந்திய அரசு ஜவுளித்துறை வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு கைத்தறி எக்ஸ்போ கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் நேற்று துவக்கிவைத்தார். இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் துவக்கிவைத்து தெரிவித்ததாவது:-

சேலம் வெண்பட்டு வேட்டிகள், ஈரோடு சரகம் சென்னிமலை மற்றும் கரூர் சரகம் படுக்கை விரிப்புகள், போர்வைகள், மதுரை சுங்கடி, கோடம்பாக்கம் இரக சேலைகள், காட்டன் வேட்டிகள், கைலிகள், கடலூர் சரக குறிஞ்சிப்பாடி கைலிகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் சரக ஆர்கானிக் காட்டன் சேலைகள், கோவை சரக சாப்ட் சில்க் சேலைகள், விருதுநகர் சரக செயற்கை பட்டு சேலைகள், கைலிகள் மற்றும் கைத்தறியின் இதர தயாரிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் நுகர்வோர்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில் இங்கு 29.12.2016 முதல் வருகின்ற 12.01.2017 வரை காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடத்தப்படுகிறது.

இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பருத்தி மற்றும் பட்டு இரகங்களுக்கு 30மூ தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. மேலும் இக்கைத்தறி கண்காட்சிக்கான விற்பனை குறியீடு ரூ.40.00 இலட்சங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த ஆண்டு குறியீட்டினை விட இக்கைத்தறி கண்காட்சியில் ரூ.50.00 இலட்சம் வரை விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தீபாவளி 2015ல் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சிக்கு விற்பனை குறியீடு ரூ.10.00 இலட்சங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு குறியீடு முழுமையாக எய்தப்பட்டது.

கைத்தறி இரகங்களை வாங்குவதன் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் நெசவாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அளித்திட இயலும் என்பதால், கைத்தறி இரக விற்பனையை அதிகரிக்க வேண்டும் எனவும், நுகர்வோருக்கு கைத்தறி இரகங்களை வாங்கிட வாய்ப்பு அளித்திடு வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மதுரை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் சீனிவாசகம், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக் குழு உறுப்பின் கிருஷ்ணமூர்த்தி, மதுரை மற்றும் தேனி மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: