முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு அலகிற்கு சமுகப்பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      திருச்சி

திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஒரு சமுகப்பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

 

விண்ணப்பிக்கலாம்

 

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். சமூகப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றப்படுத்துதல் துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் குழந்தை சார்ந்த பணியில் 2 வருட பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேணடும். (10+2+3) மாதிரி, தொகுப்பூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ. 14 ஆயிரம் வழங்கப்படும்.

உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி மற்றும் கணினி இயக்குவதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தொகுப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க http://www.trichy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண்.1 ரேஸ் கோர்ஸ் ரோடு, காஜாமலை, திருச்சி 23. என்ற முகவரிக்கு 17.01.2017ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பவேண்டும். மேலும் விபரங்களுக்கு 0431-2421055, 7092175650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமிதெரிவித்துள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்