Idhayam Matrimony

மாநில அளவில் நடைபெற்ற தேக்வான்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      சேலம்
Image Unavailable

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (02.01.2017) கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கலெக்டர் தெரிவித்ததாவது. தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களை விரைந்து சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பார்வையற்ற மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவியாக தலா ரூ.17,000க்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 26.12.2016 முதல் 29.12.2016 வரை திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் தேக்வான்டோ பிரிவில் சேலத்தை சார்ந்த கே.ஆறுமுகம், வி.சரன், ஜி.சேநேகா ஆகிய மூவரும் தங்கப்பதக்கம் மற்றும் தலா 1 லட்சம் பரிசு தொகையும், ஏ.மேகராஜன், வி.வித்யா இருவரும் வெள்ளி பதக்கம் மற்றும் தலா 75 ஆயிரம் பரிசு தொகையும், சர்மிய தேவி என்ற வீராங்கனை வெங்கள பதக்கம் மற்றும் 50 ஆயிரம் பரிசு தொகையும் வென்று உள்ளார்கள். இவர்கள் கலெக்டர் அவர்களை வெற்றி கோப்பையுடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவிக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) செல்வி.அமுதவல்லி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.கனகராஜ் வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்