டேக்வாண்டோ போட்டியில் சாதனை: வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திண்டுக்கல்
2

திண்டுக்கல் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிமற்றும் வெண்கலப்பதக்கம் வென்று, ரூ.3 இலட்சம் பரிசுத்தொகையினை பெற்ற வீரர்,  வீராங்கணைகளை ஊக்குவிக்கும் வகையில் தனது பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 2016- 17ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ பேட்டிகள் கடந்த 26.12.2016 முதல் 29.12.2016 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம்பெற்று வெற்றி பெற்றனர்.
மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் ஜே.சல்மான்கான் மற்றும் எம்.புவனேந்திரன் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்று தலா ரூ.75 ஆயிரமும், ஆர்.திஷன், எஸ்.சாய்கிஷோர் மற்றும் எம்.மனோஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று தலா ரூ.50 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.3 இலட்சம் பரிசுத்தொகை பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.


வெற்றி பெற்ற வீரர் வீராங்கணைகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் பராட்டி சான்றிதழ்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில்,  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், திண்டுக்கல் கிழக்கு வட்டம், பெரியகோட்டை கிராமத்தைச் சார்ந்த காளீஸ்வரி என்பவருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கள்ளப்பாளையம் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் தீருதவித்தொகையாக தலா ரூ.4,12,500க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் வழங்கினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: