முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகள்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் ஏரி, குளங்கள் வறண்டு போனது. இதன் காரணமாக பாசனத்திற்கு போதிய தண்ணீர்இல்லாமல் விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த பயிர்கள் கருகி வருகிறது. ரூபாய் பல லட்சம் செலவு செய்து பயிரிட்ட பயிர்கள் கருகி வீணாவதை கண்டு விவசாயிகள் பலர் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்தது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதித்த விவசாய நிலங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை மாவடடத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அரசு முதன்மை செயலாளரும் வறட்சி பார்வையிடும் கண்காணிப்பு அதிகாரியுமான ஜிஜேந்திரநநாத் ஸ்வைன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். போளூர் வட்டம் வசூர் கிராமம், கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு, சோழவரம், செங்கம் வட்டம் காரப்பட்டு, சே.நாச்சிப்பட்டு, தண்டராம்படடு வட்டம் சாத்தனூர், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் வறட்சி பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடந்தது. அப்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் கீழ்பென்னாத்தூர் வட்டம் கடம்பை, சோ.காட்டுகுளம் ஆகிய கிராமங்களில் ஆகிய கிராமங்களில் வறட்சி பாதித்த இடங்களையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மலை மாவட்டத்தில் வறட்சி பணிகளை ஆய்வு செய்த இந்த குழுவினர் உரிய முறையில் கணக்கெடுக்கப்பட்டு இதன் அறிக்கைகளை விரைவில் தமிழக அரசுக்கு அளிக்கப்படும். மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் நிலபரப்பில் நெற்பயிர், நிலக்கடலை, கரும்பு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டதில் சுமார் 33 சதவிதம் சம்பா பருவ சாகுபடியில் 50சதவிதம் சம்பா சாகுபடிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசுசுக்கு அறிக்கை அளித்து உரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்