முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற புதிய வசதி அறிமுக விழிப்புணர்வு ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      சேலம்

================================

சேலம்

சேலம் மாநகராட்சி வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற செல்போன் மூலம் புதிய வசதி அறிமுக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது..

சேலம் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க மத்திய அரசு தேர்வு செய்தது.. இதனையடுத்து மத்திய அரசின் புதிய தூய்மை திட்டத்தின் கீழ் உடனுக்குடன் குப்பைகளை அள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.. அதனொரு பகுதியாக சேலம் மாநகராட்சியின் அறுபது கோட்டங்களிலும் தேங்கும் குப்பைகள், உடைப்பு தண்ணீர் குழாய் மற்றும் தெருக்களின் சீர்கேடுகள் காணபட்டால் அதனை அகற்றுவதற்கான தகவலை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தெரியபடுத்தகூடிய புதிய வசதியான ஆண்ட்ராய்டு செல்போனில் ஸ்வச்ச தா app பதிவிறக்கம் செய்யும் வசதியை பொது மக்களுக்கு தெரியபடுத்தும் விழிப்புணர்வு  ஊர்வலம் சேலத்தில் நடைபெற்றது. ஊர்வலத்தை மாநகராட்சி பொறியாளர் அசோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.. இந்த ஊர்வலமானது எல்லை பிடாரியம்மன் கோவில், குமாரசாமி பேட்டை, வின்சென்ட், காந்தி ரோடு வழியாக அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நிறைவடைந்தது.. இதில் சுகாதார அலுவலர்கள், JCi அரிமா சங்க நிர்வாகிகள், மற்றும் நாட்டு நல பணி திட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் வாசகங்களுடன் கூடிய வாகனத்துடன் சென்றுபொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்