முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நாளை துவங்குகிறது: கலெக்டர் மு.ஆசியா மரியம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      நாமக்கல்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அரசு பொருட்காட்சி வருகின்ற 10.01.2017 செவ்வாய்க்கிழமை அன்று துவங்கி 45 நாட்கள் நடைபெறவுள்ளது – கலெக்டர் மு.ஆசியா மரியம்  தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம்   மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாமக்கல் மாவட்டம் கடந்த 01.01.1997 முதல் புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய 34-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அரங்குகள், பல்வேறு தனியார் அரங்குகளுடன் கூடிய மாபெரும் அரசுப் பொருட்காட்சி, நாமக்கல் (தெற்கு) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்பொருட்காட்சியில் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள், சாதனைகள் அடங்கிய கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. செய்தி மக்கள் தொடர்பு துறை, சுற்றுலாத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (மாவட்ட தொழில் மையம்), ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை), கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத்தொழில் துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல் துறை (மாசு கட்டுப்பாட்டு வாரியம்), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன் வளத்துறை ஆகிய 27 அரசு துறைகளும், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், ஆவின், நாமக்கல் நகராட்சி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட், ஆர்.பி.ஐ உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவனங்களும் என மொத்தம் 34-க்கிற்கும் மேற்பட்ட துறைகளின்  சார்பில் கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அரசு பொருட்காட்சியானது நாள்தோறும் மாலை 4.00 முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும்.

நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறுகின்ற அரசு பொருட்காட்சியினை வருகின்ற 10.01.2017 செவ்வாய்க்கிழமை அன்று  அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கலெக்டர் உள்ளிட்ட உயர்அலுவலர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்கள். பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப்பொருட்காட்சியினை நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் குடும்பத்தினரோடு வருகை தந்து கண்டு களித்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago