முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்கள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வறட்சி குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை அரசு முதன்மை செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா .  தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன் .  முன்னிலையில்  நடைபெற்றது.

இவ்வாய்வுக் கூட்டத்தின் போது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை அரசு முதன்மை செயலர்  உரையாற்றும் போது;

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் வினியோகிக்கும் வகையில் ஓகேனக்கல்  கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குறைந்த அழுத்த பகுதிகளை கண்டறிந்து பைப் லைன்களை மாற்றியும், பழுதான குடிநீர் பைப்லைன்களை சரிசெய்தும் சீரான குடிநீர் வினியோகம்  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து  அரசு துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து சூளகிரி வட்டாரத்திற்குட்பட்ட  பெத்தசிகரளப்பள்ளி, கடத்தூர், மற்றும் முதுகுறுக்கி  ஆகிய கிராமங்களிலும், ஓசூர் வட்டாரத்திற்குட்பட்ட கொளதாசப்புரம் மற்றும் பலவனப்பள்ளி ஆகிய கிராமங்களிலும் வறட்சியால் பாதிப்பிற்குள்ளான பயிர்களான  ராகி, துவரை, காராமணி, சோளம் உள்ளிட்ட பயிர்களை நேரில் ஆய்வு  மேற்கொண்டு விவசாயிகளிடம் பயிர் பாதிப்பு குறித்து  கேட்டறிந்தார்.  மேலும் விவசாயிகளிடம் குடிநீர் பிரச்சனைகள் குறித்தும், பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறித்தும் கேட்டறிந்தார். அப்பொழுது விவசாயிகள் மழை   இன்றி பயிர்கள்  முழுவதும் பாதிப்பிற்குள்ளானது.   கால்நடைகளுக்கு தீவனமின்றி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு முதன்மை செயலர் அவர்களிடம் தெரிவித்தார்கள்.

இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, ஓசூர் சார் ஆட்சியர் மரு.கே.செந்தில் ராஜ், வேளாண்மைத் துறை இணை இயக்குநர்  பி.சங்கரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சீனீவாசன் வட்டாட்சியர்கள் தியாகராஜன், ஜே.சி.முருகன், வேளாண் உதவி இயக்குநர்கள் விஸ்வநாத ரெட்டி, செல்வராஜ், சண்முகம், துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி,  தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் சிவகுமாரப்பா, சிதம்பரம் மற்றும் உதவி வேளாண்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்