முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      சேலம்

 

சேலம்

சேலத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அருள் மிகு கோட்டை அழகிரி நாதர் திருகோவிலில் சொர்க்க வாசல் திறப்பு... ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாளைமுதலே நீண்ட வரிசையின் நின்று  சுவாமி தரிசனம் செய்தனர்....

இந்துகளின் முக்கிய விரத வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி, இந்த வைகுண்ட ஏகாதசி வைபவம் நேற்று  அணைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது .குறிப்பாக தமிழகத்தில் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கம் திருகோவிலில் வெகு விமர்சியாக கொண்டடபடுகிறது.

அதே போல அணைத்து மாநிலங்களிலும் இந்த வைபவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது, சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் நேற்று வைகுண்ட ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மிகவும் பழமையானதும் வரலாற்று மிக்க கோவிலுமான அருள் மிகு கோட்டை அழகிரி நாதர் திருக்கோவில். இந்த திருகோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் மிக விமர்சியாக கொண்டாட பட்டது.

அதிகாலை ஐந்து மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வளம் வந்து பின்னர் வடக்கு புரம் அமைந்துள்ள வருடம் ஒருமுறை திறக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பவனி வந்தார். இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர்.

பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இது குறித்து சுதர்சனம் பட்டாசாரியார் கூறும் போது விரதத்தில் மிக முக்கிய விரதம் வைகுண்ட ஏகாதசி இந்த நாளில் விரதம் இருந்தால் சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகம்.எனவும் இந்த நாளில் பெருமாளை தரிசிப்பது குடும்பத்திற்கு மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார். இதே போல சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து விட்டு சொர்க்க வாசல் வழியாக வந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago