நாட்டு நலப்பணித்திட்ட முகாம்:

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      மதுரை
tmm

 திருமங்கலம் - மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள விடத்தக்குளம் கிராமத்தில் பி.கே.என் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட முகாம் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

என்.எஸ்.எஸ்-முகாம்:

திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப்பள்ளி சார்பில் விடத்தக்குளம் கிராமத்தில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் பாலமுருகன்,உதவி திட்ட அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு விடத்தக்குளம் கிராமத்தை தூய்மைப் படுத்துதல்,கழிப்பறையின் அவசியம்,மரங்கள் வளர்ப்பதன் பயன்கள்,பசுமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு களப்பணிகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.

விழிப்புணர்வு நிகழச்சிகள்:

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளையும் மாணவர்கள் இன்முகத்துடன் செய்து வருகின்றனர். இந்த முகாமில் மழைநீர் சேகரிப்பு,கழிப்பறையின் அவசியம்,பசுமை பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்களின் விழப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.பின்னர் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும்,புவி வெப்பமடைதல் குறித்தும் நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழச்சியில் சமூகஆர்வலர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தன்னலமின்றி மாணவர்கள் மேற்கொண்டு வரும் இந்த நாட்டுநலத்திட்ட களப்பணிகள் விடத்தக்குளம் கிராமமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: