முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை நகராட்சி கமிசனர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 கொடைக்கானல்-

கொடைக்கானல் ஏரியில் லாரிகள் மூலம் தண்ணீர் திருடுபவாகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கமிசனர் எச்சக்கை விடுத்துள்ளார்.

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் தற்போது நிலவி வருகின்றது. இந்த நிலையில் குடி நீர் வினியோகம் பற்றி கொடைக்கானல் நகராட்சி கமிசனர் சரவணன் கூறியதாவது:- கொடைக்கானலில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கொடைக்கானல் நகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொடைக்கானல் குடி நீர் தேக்கங்களில் போதிய குடி நீர் இல்லை பழைய தேக்கத்தில் 2 அடி நீர் மட்டுமே உள்ளது. இதனால் லாரிகள் மூலம் குடி நீர் வினியோகம் செய்ய தனியார் லாரி உரிமையாளாருக்கு ஒரு லோடு தண்ணீர் 1000 ரூபாய் என்ற விதத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றது.ஜிம்கானா பகுதியில் உள்ள நகராட்சி கிணற்றில் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகின்றது. இதை கண்காணிக்க இங்கு சி.சி.டி.வி கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

ஜிம்கானா பகுதியில் இருந்து சப்ளையாகும் குடி நீரை அண்ணா சாலையில் உள்ள தொட்டிக்கு பம்ப் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வறட்சியை பயன்படுத்தி கொடைக்கானல் ஏரியில் லாரிகள் மூலம் தண்ணீர் திருடப்பட்டு ஓட்டல்களுக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. கொடைக்கானல் ஏரியில் லாரிகள் மூலம் தண்ணீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரியில் தண்ணீர் திருட்டை தடுக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும்.

3 வது வார்டு பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை வைத்தனர் அப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் ஜிம்கானா பகுதியில் ஒரு ஆழ் துளை கிணற்றில் தண்ணிர் எடுக்க அனுமதி கோரினர் அந்த கோரிக்கையும் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைக்கு பின் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்