குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பினை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      விருதுநகர்
vnr

  விருதுநகர்.
 தமிழ்நாடு முதலமைச்சர்   உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகர் கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம். தலைமையில் நடைபெற்ற விழாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை  பால்வளத்துறை அமைச்சர்கே.டி.ராஜேந்திரபாலாஜி  ஆகியோர் வழங்கினார்கள்.
 இந்நிகழ்ச்சியில்  பால்வளத்துறை அமைச்சர்கே.டி.ராஜேந்திரபாலாஜி   பேசும் போது தெரிவித்ததாவது :-

தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு வாய்ந்த எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலகத்தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா, தமிழர் திருநாள், உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள், இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் திருநாள் என பல சிறப்புகள் வாய்ந்த பொங்கல் திருநாளை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு  வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்களுக்கும், காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத்தமிழர் குடும்பங்கக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 80 லட்சம் அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அரிசி பெற தகுதியுடைய 5 லட்சத்து 464 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 ஆயிரத்து 4 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள 1 ஆயிரத்து 76 இலங்கைத்தமிழர் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 5 லட்சத்து 3 ஆயிரத்து 544 குடும்பங்களுக்கு ரூ.5 கோடியே 34 லட்சத்து 98 ஆயிரத்து 600 மதிப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் இன்று நடைபெறும் இவ்விழாவில் 400 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்மந்தபட்ட நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும். சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என   பால்வளத்;துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), திருமதி.எம்.சந்திரபிரபா (திருவில்லிபுத்தூர்), மாவட்ட வருவாய் அலுவலர்சி.முத்துக்குமரன் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: