முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருஉத்தரகோசமங்கை அபூர்வ மரகத நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனகாப்பு களையபட்டது

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டுள்ள சந்தனக்காப்பு ஆருத்ரா தரிசனத்தையொட்டி களைப்பட்டது. ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை திருக்கோவில். இங்கு மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். மேலும், இங்கு எழுந்தருளியுள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

இதன்படி நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி நேற்று காலை 8.00 மணிக்கு சிறப்பு ஆராதணை நடைபெற்ற பின்னர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சந்தனம் களையப்பட்ட நடராஜரை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து மரகத நடராஜருக்கு பால், நெய், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட ஏராளமான அபிசேகங்கள் நடைபெற்றன. மரகத நடராஜர் சிலை மீது பட்டு வரும்

இந்த அபிசேக நீர் மருத்துவ குணம் வாய்ந்ததாக கருதப்படுவதால் ஏராளமானோர் அபிசேக நீரை பிடித்து சென்றனர். ராமநாதபுரம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவில், கலெக்டர் முனைவர் நடராஜன், மன்னர் குமரன்சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவின் நிறைவாக இன்று(புதன்கிழமை ) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனம் பூசி சிறப்பு ஆராதணைகள் நடத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்