Idhayam Matrimony

திறமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது பள்ளி விழாவில் நீதிபதி செய்யது சுலைமான் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி,

திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் திண்டுக்கல் நீதிபதி செய்யது சுலைமான் பேசினார்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 15வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற (எண் 3) நீதிபதி எம். செய்யது சுலைமான் கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

குழந்தைகளின் படிப்பிற்காக எவ்வளவு செலவு செய்யவும் பெற்றோர் தயாராக இருக்கின்றனர். இதனை மாணவ, மாணவிகள் மனதில் வைத்துக் கொண்டு கல்வி, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். திறமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் வக்கீல்களும் இருக்கின்றனர். இது அவர்களின் திறமைக்காக வழங்கப்படுகிறது.

எந்த துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை தேர்வு செய்து அதற்கு ஏற்றால் போல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படித்து திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி வர்ஷh வரவேற்றுப் பேசினார். மாணவி கார்த்திகா ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை பேராசிரியை டாக்டர் அனார்கலி, நர்சரி, துவக்கப்பள்ளிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வக்கீல் பாலசெந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிகளை மாணவர்கள் ராஜநவீஸ் இமான், லிமான் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவி பா.மீனா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்