முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு பொருட்கள்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,   தமிழக அரசு வழங்கக்கூடிய இலவச பொங்கல் பரிசுப்பொருட்களை திண்டுக்கல் மாநகரில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ் வழங்கினார்.

மறைந்த தமிழக முதல்வர் அம்மா தமிழக மக்களுக்காக பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய திட்டம் தற்போது இந்த ஆண்டும் தமிழக அரசு இலவச பொங்கல் பரிசு பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இலவச பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியினை திண்டுக்கல் ஒன்றியம் குரும்பபட்டி ஊராட்சி மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து திண்டுக்கல் மாநகர மக்களுக்கு நியாய விலைக்கடை மூலமாக பொங்கல் பரிசுப்பொருட்களை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளருமான வி.மருதராஜ் வழங்கினார். திண்டுக்கல் 8வது வார்டு நாயக்கர் புதுத்தெருவில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதனையடுத்து 5வது வார்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மருதராஜ் பொங்கல் பரிசு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதேபோன்று 9வது வார்டு பகுதியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பாண்டி, 14வது வார்டு பகுதியில் பகுதி செயலாளர் மோகனும், 15வது வார்டு பகுதியில் பழக்கடை நாகராஜனும், 6வது வார்டு பகுதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜேந்திரனும் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் மருதராஜ் பொங்கல் பரிசு பொருட்களான அரிசி, ஜீனி, கிஸ்மிஸ், ஏலம், முந்திரி, கரும்பு ஆகியவற்றை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அபிராமி கூட்டுறவு சங்கதலைவர் பாரதிமுருகன், பகுதி செயலாளர் சேசு, பேரவை செயலாளர் வி.டி.ராஜன், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பாசறை நிர்வாகி அருண்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago