முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்ல 1.70 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி  - இந்தியாவில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல இந்த ஆண்டு 1.70 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 29 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் புனிதப் பயணம்
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும்...
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ்  குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. இந்த குழுவானது ஆண்டு தோறும் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை சவுதி அரேபிய அரசுடன் கலந்து ஆலோசித்து வெளியிட்டு வருகிறது.

அதிக எண்ணிக்கை
இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல இந்த ஆண்டு 1.70 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்க ஹஜ் கமிட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1.36 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மை நலத் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்து
இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அந்நாட்டு அமைச்சர் முகமது சலேஹ் பின் தஹெர் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.  நக்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் மற்றும் அரசு சார்பில் சவுதி அரசிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளார். ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கடந்த ஜனவரி 2-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கான கடைசி நாள் ஜனவரி 24-ம் தேதி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago