முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தத்தில் ஹமீது ஆஷிக்கீன் தர்கா சந்தன உரூஸ் விழா

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம், - நத்தம் பெரிய பள்ளிவாசலில் உள்ள சையது சாகுல் ஹமீது ஆஷிக்கீன் தர்கா சந்தன உரூஸ் விழா நேற்றிரவு நடந்தது. நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித சந்தனக் குடத்தை டாக்டர் நசீர் அகமது சையது தலையில் சுமந்து வர சந்தன உரூஸ் ஊர்வலம் நடந்தது-, அப்போது வாண வேடிக்கையுடன், நாகூர் சலங்கை ஒலிக்க இறைவனின் புகழ் பாடி (பயித் ஓதி) சென்றனர். இந்த ஊர்வலம் பெரிய பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு சந்தனக்குடத்தெரு, பெரியகடை வீதி, மஸ்தான் பள்ளிவாசல் தெரு வழியாக மீண்டும் தர்காவை வந்தடைந்து, தொடர்ந்து அங்கு சந்தனம் பூசப்பட்டது.

பின்னர் உலக நன்மை வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர். இதில் வேம்பார்பட்டி பள்ளிவளர்ச்சிக்குழு தலைவர் கண்ணு முகமது, நத்தம் நகர ஜெ.பேரவை செயலாளர் சேக்தாவூது, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணன் உள்பட நத்தம் மற்றும் நாகூர், கம்பம் போன்ற வெளிமாவட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வக்கீல் முகமது சாலியா, முகமது ஜுல்பிகர், இன்ஜினியர்கள் முகமது சாலியா, முகமது மீரான் உள்ளிட்ட தர்கா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago