முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடந்தை ஐயப்பன் கோயிலில் ஜோதி தரிசன விழா திரளான பக்தர்கள் வழிபட்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

கும்பகோணம் : கும்பகோணத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஜோதி தரிசன விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள பிரசித்திபெற்ற ஐயப்பன் கோயிலில் 12-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில் திருவாபரண ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற ஊர்வலம் கோயிலை வந்தடைந்ததும், திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஜோதி தரிசன விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னை நங்கநல்லூர் ஐயப்பன் கோயிலில் மகர உற்சவம் மற்றும் திருவாபரணம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஸ்ரீதியாகராஜ சுவாமி:

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோயிலான வடக்குவீதி ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் மகரஜோதி தரிசனத்தையொட்டி சிறப்பு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம்:

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் எழுந்தருள, திருக்கைத்தல சேவை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த சேவையை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் 7-ம் நாள் திருவிழாவையொட்டி, பெருமாள் ரத்தின அங்கி அணிந்து, பரமபதவாசல் வழியே எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, நம்மாழ்வார் சேவை, திருவீதி உலா நிகழ்ச்சி, படியேற்ற சேவை நடைபெற்றது.

குமாரபாளையம் :

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செளடேஸ்வரி அம்மன் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு மற்றும் சாமுண்டி அழைப்பு நடைபெற்றது. குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரதமிருந்த பக்தர்கள், தங்கள் மார்பில் கத்திபோட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புனித அந்தோணியார் ஆலயம் :

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் சப்பரபவனி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago