முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 3 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அன்னியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பில் உள்ள ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை, மாதம் இரு முறை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 3 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்