முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி ஏ.டி.எம்.களில் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் :ரிசர்வ் வங்கி அறிவிப்பு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - ஏ.டி.எம்களில் பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.10 ஆயிரமாகவும், நடப்பு கணக்குதார்கள் வங்கிகளில் வாரம் ஒன்றிற்கு ரூ.1 லட்சம் வரையிலும் பணம் எடுப்பதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுஎன ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதியன்று பிரதமர் மோடி தொலைக்காட்சி உரையில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.  நாட்டில் உள்ள கறுப்பப்பணம் , வரி ஏய்ப்பு, ஊழல் , தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளித்தல் ஆகியவற்றை முற்றிலும் ஒடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். பா.ஜ. க.தலைமையிலான என்.டி.ஏ .கூட்டணி அரசின் இந்த முடிவை தொடர்ந்து மக்கள் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் குவிந்தார்கள். அவர்கள் நாள் முழுவதும் வரிசையில் நின்று பணத்தை மாற்றினார்கள். அதேப்போன்று வங்கிகளில் போட்டுள்ள பணத்தை எடுக்கவும் மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  அதன் படி வாரம் ஒன்றிற்கு ரூ24 ஆயிரம் வரை மட்டுமே சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்க முடியும் என்றும் ஏ.டி.எம்களில் நாள் ஒன்றுக்கு ரூ 4ஆயிரத்து 500 வரை மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளுக்கு பதிலாக அரசு புதிய ரூ2ஆயிரம் நோட்டுகளையும், புதிய ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டு வெளியிட்டது.புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் வங்கிகளில் மக்கள் பணம் எடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சாதாரண , நடுத்தர , ஏழை மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகிறார்கள். தொழில்கள் முடங்கி விட்டன. வங்கிகளில் பணம் எடுப்பதற்காக நாள் முழுவதும் வெயிலில் நின்ற 100 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனவே அரசு ரூபாய் நோட்டு முடிவை வாபஸ் பெற வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிகரஸ் போன்ற எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி இதுவரை இரண்டு மாத காலம் ஆகியுள்ளது. இந்த நிலையில் நாள் தோறும்,ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் ரூ4ஆயிரத்து 500ல் இருந்து ரூ10 ஆயிரமாகவும், வங்களில் நடப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ50ஆயிரத்தில் இருந்து ரூ1லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பணம் எடுக்கும் வரம்பு அதிகரிப்பு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. மேலும் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்கள் வங்கிகளில் இருந்து வாரத்திற்கு ரூ24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.இந்த பண வரம்பு சேமிப்பு கணக்குதாரர்களுக்கு தொடர்ந்து நீடிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தினமும் ரூ 10 ஆயிரத்தை ஏ.டி.எம்களில் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டபோதும் வாரத்திற்கு ரூ24ஆயிரம் வரை மட்டுமே சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் எடுக்கமுடியும் என ரிசர்வ் வங்கி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்