முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல், திண்டுக்கல்லில் நேற்று 2வது நாளாக பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு நடைபெற்றது. இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. திண்டுக்கல் நல்லாம்பட்டியில் நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு அதில் பங்கேற்று காளைகளை பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அன்று மாலையில் பேகம்ஞீர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

நேற்று நல்லாம்பட்டியில் ஆடு, மாடு, காளைகளுக்கு சிறப்பு ஞீஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20 காளைகளை மஞ்சு விரட்டில் பங்கேற்க வைத்தனர். அந்த காளைகளை இளைஞர்கள் பிடிக்காமல் ஓட விட்டனர். அவை ஊரின் முக்கிய பகுதிகள் வழியாக வந்து மீண்டும் கோவில் பகுதியை அடைந்தது. இதேபோல் வெள்ளோடு பகுதியிலும் காளைகளை ஓட விட்டு மஞ்சு விரட்டு போட்டி நடத்தப்பட்டது. முன்னதாக காளைகளுக்கு ஞீக்கள் மற்றும் வண்ண பொட்டுக்கள் வைத்து அலங்காரம் செய்து தப்படித்து ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். 30க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் பழனி அடுத்துள்ள நெய்க்காரப்பட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு காளைகளை அவிழ்த்து ஜல்லிக்கட்டு நடத்தினர். இதுகுறித்து போலீசாருக்கு தெரியவரவே அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் காளைகளை அவர்கள் பிடித்து சென்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்