முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா மறைவிற்கு பின் கழகம் பிளவுபடும் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கியவர் சின்னம்மா மாவட்ட செயலாளர் மருதராஜ் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,-, மறைந்த முதல்வர் அம்மா மறைவிற்கு பின் அ.தி.மு.க. பிளவுபடும் என்ற எதிர்க்கட்சியினர் எண்ணத்தை தூள் தூளாக்கியவர் சின்னம்மா என புகழாரம் சூட்டி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ் பேசினார். எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா தமிழக முன்னாள் முதல்வரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஊர்வலம் மற்றும் மாலை அணிப்பு, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்தும் மறையாத தமிழக மக்களின் ஞிங்கா இடம் பெற்ற புரட்சித்தலைவர் என்ற பட்டத்திற்கு சொந்தமான தமிழக முன்னாள் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. கழகம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான மருதராஜ் தலைமை வகித்தார். ஊர்வலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெரும்புடை சூழ மெயின் ரோடு, பெரியார் சிலை வழியாக திண்டுக்கல் பஸ் நிலையம் அருகிலுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை வந்தடைந்தது. அங்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் மாலை அணிவித்து பேசுகையில், வள்ளல்

எம்.ஜி.ஆர். கடையேழு வள்ளல்களை கண்டதில்லை. ஆனால் 8வது வள்ளலாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கண்டோம். 9வது வள்ளலாக புரட்சித்தலைவி அம்மாவை கண்டோம். 10வது வள்ளலாக சின்னம்மாவை கண்டுள்ளோம். இன்றைய தினம் நடைபெறவுள்ள புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சியில் நலிவடைந்த 204 பேர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் சின்னம்மா தலைமை கழகத்தில் வழங்கியுள்ளார். புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் விட்டுச் சென்ற பணிகளை சின்னம்மா நிறைவேற்றி வருகிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அ.இ.அ.தி.மு.க. இருக்காது என்றனர். ஆனால் நான் இருக்கிறேன் என புரட்சித்தலைவி அம்மா கட்சியை கட்டி காப்பாற்றி பல ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்தார். அவரது மறைவிற்கு பின்னர் அ.இ.அ.தி.மு.க. சுக்குநூறாக உடைந்து விடும் எதிர்க்கட்சிகள் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணம் தூள் தூளாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒன்றிணைந்து பொதுச் செயலாளராக சின்னம்மா வர வேண்டுமென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி அவர் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோர் வழிகாட்டுதலின்படி சின்னம்மா கட்சியை வழிநடத்திச் செல்வதற்காக பதவியேற்றுள்ளார்.

எதிர்க்கட்சி எண்ணம் தூள் அ.இ.அ.தி.மு.கழகத்தை புரட்சித்தலைவி அம்மா கூறியது போல் இன்னும் 100 ஆண்டு காலம் ஆட்சியையோ, கட்சியையோ எவராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. இந்நேரத்தில் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஆங்காங்கு கிளைக்கழகத்தின் மூலமாக தங்களால் முடிந்தவரை கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்கள் வழங்கி புரட்சித்தலைவரின் புகழைப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பேசினார். கலந்து கொண்டோர் நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.கே.டி.நடராஜன், அபிராமி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்சா, பேரவை செயலாளர் வி.டி.ராஜன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், பாசறை செயலாளர் ஆனந்தகுமார், அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, பி.ஜி.எம்.துளசிராம், முன்னாள் நகர செயலாளர் ராமுத்தேவர், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்