முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28-வது சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர்.வீர ராகவ ராவ், தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

.மதுரை. - மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற 28வது சாலைப் பாதுகாப்பு வார விழாவில், தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ், தொடங்கி வைத்தார்.

இப்பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:
 தமிழகத்தில் விபத்தில்லா சாலைப் பயணம் அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செயல்படும் தமிழக அரசின் மூலம் இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. வன்முறையாலும், தீவிரவாதத்தாலும், முன்விரோதத்தாலும் ஏற்படுகின்ற உயிர்ப்பலிகளை விட சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தினால் அதிக அளவில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சாலை விபத்துக்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு காரணம் சாலை விதிகளை முறையாக பின்பற்றாததே காரணமாகும்.
 இனிவரும் காலங்களில் சாலை விபத்துக்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்குதான் இதுபோன்ற சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவற்றை முறையாக பின்பற்றி அனைவரும் சாலை விதிகளை கடைபிடிப்போம் என்ற உறுதிமொழி எடுத்து உயிர்ப்பலியை தடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
 சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஒரு வார காலத்திற்கு சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு “உங்கள் பாதுகாப்பு, உங்கள் குடும்பத்தைக் காக்கும்” “சாலையில் விழிப்புடன் இருப்பீர்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி 28-வது சாலைப் பாதுகாப்பு வாரவிழா இன்று(17.01.2017)முதல் வருகின்ற 23.01.2017 வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்தினை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கல்யாணக்குமார், பாஸ்கரன், சிங்காரவேலு, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்