முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு சார்பில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி -தமிழக அரசு சார்பில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12,254 மாணவ மாணவிகளுக்கு 4.57 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளை பள்ளிக்கல்விதுறையின் சார்பில் பழனிசெட்டிபட்டியில் நேற்று நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது, தமிழக அரசு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நான்கில் ஒரு பங்கு நிதியினை கல்வித்துறைக்காக ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழக அரசு இன்றைய விஞ்ஞான உலகிற்கு ஏற்ற உலக தரம் வாய்ந்த கல்வியினை ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பொருட்டு கல்விசார்ந்த திட்டங்களை தீட்டி அதனை சிறப்பாகவும் செம்மையாகவும் செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், பள்ளி மாணவ, மாணவியர்கள் உரிய நேரத்தில் பள்ளி சென்று வருவதற்காகவும், தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு எளிதில் சென்று வருவதற்காகவும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.

இன்றைய விஞ்ஞான காலத்தில் கல்வி என்பது மிக மிக அவசியமாகும் என்பதனை கருத்தில் கொண்டு உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகளையும் வழங்கி வருகிறது. மேலும், மாணவ, மாணவியர்களின் ஏழ்மையின் காரணமாக கல்வி எந்த ஒரு சூழ்நிலையிலும் தடைபடக் கூடாது என்பதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை, விலையில்;லா பாட புத்தகம், நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, விலையில்லா பேருந்து பயணஅட்டைகளை வழங்கி வருகிறது. மாணவ, மாணவியர்கள் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி சார்ந்த திட்டங்களை பயன்படுத்தி மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வாசு வரவேற்புரையாற்றினார். தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன், எஸ்.டி.கே. ஜக்கையன், கே.கதிர்காமு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல், உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் வனஜா கிரனாப் செல்வக்குமாரி;, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன்;, வட்டாட்சியர் ஷேக்ஆயூப்;, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவாக பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்து நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்