முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கல்வி துறையின் சார்பாக விலையில்லா சைக்கிள்கள்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார். ராமநாதபுரம் புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் நகரத்தில் உள்ள 6 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 2,415 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது :- மண்ணில் மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர்.ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறும் விதமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்கள்.

அந்தவகையில் மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சி தான் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் மாணவ,மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா நோட்டுப்புத்தகங்கள், விலையில்லா சீருடை, விலையில்லா பயணப் பேருந்து பயண அட்டை உட்பட 14 வகையான மாணவர் நலன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்அமைச்சரின் சிறப்பு திட்டமான மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 6லட்சத்து 35ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. அவற்றில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 6ஆயிரத்து 266 மாணவர்கள், 7ஆயிரத்து 445 மாணவியர்கள் என மொத்தம் 13ஆயிரத்து 711 மாணவ, மாணவியர்கள் விலையில்லா மிதிவண்டிகள் பெற்று பயன்பெறவுள்ளனர். அதனடிப்படையில் இன்று நடைபெறும் இவ்விழாவில் முதற்கட்டமாக ராமநாதபுரம் நகரில் உள்ள ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 164 மாணவ, மாணவியர்கள், ராஜா மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 164 மாணவ, மாணவியர்கள், செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 1530 மாணவ, மாணவியர்கள், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 166 மாணவியர்கள், புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 275 மாணவியர்கள், டிடி விநாயகர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 116 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 2,415 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 5லட்சத்து 35ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.

தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு அரசு ரூ.4ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் மாணவ, மாணவியர்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆக்கப்பூர்வமான கல்வியினை பெற்று அறிவியல் துறை உட்பட அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கிட ஏதுவாக திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் இதுபோன்ற எண்ணற்ற மாணவர் நல திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, பள்ளிப்பருவத்தில் தங்களது கவனங்களை சிதற விடாமல் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்று, சக மனிதர்களிடத்தில் அன்பு பாராட்டி, கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும். இவ்வாறு பேசினார். இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 185 உயர்நிலை- மேல்நிலைப் பள்ளிகளும், ஆயிரத்து 515 தொடக்க- நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 2016-2017-ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் 43ஆயிரத்து 262 மாணவர்கள், 46,300 மாணவிகள் என மொத்தம் 89,562 மாணவ, மாணவிகளும், தொடக்க - நடுநிலைப் பள்ளிகளில் 33,145 மாணவர்களும், 33,782 மாணவிகள் என மொத்தம் 66,927 மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அர

சு பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 97.1 ஆகும். இது மாநில அளவில் நான்காம் இடமாகும். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் 95.04 ஆகும். இது மாநில அளவில் ஒன்பதாவது இடமாகும். தமிழ்நாடு அரசு மாணவர் நலனுக்காக செயல்படுத்தி வரும் அனைத்து மாணவர் நல திட்டங்களும் மாணவ, மாணவியர்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக 25 கிராம அளவிலான வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினார். இவ்விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.முத்தையா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வி.ஜெயராமன், புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மனோகர் மார்டின் உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago