முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் இன்று மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை  - சபரிமலையில் இன்று இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். நாளை  (20-ந்தேதி) கோவில் நடை சாத்தப்படுகிறது.

மகர விளக்குபூஜை
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. பிரசித்திபெற்ற மகர விளக்குபூஜை கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நேற்று இரவுடன் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நிறைவு பெறுகிறது. திரளான பக்தர்கள் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வருகிறார்கள்.

படி பூஜை
சபரிமலையில் தற்போது படி பூஜையும் நடந்து வருகிறது. இன்று வரை படி பூஜை நடைபெறுகிறது. ரூ.70 ஆயிரம் கட்டணத்தில் நடைபெறும் இந்த பூஜைக்கான முன்பதிவு 2033-ம் ஆண்டு வரை முடிந்துவிட்டது. இன்று இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நாளை மாலை 6 மணிக்கு மேல் பம்பையை தாண்டி பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது.

நடை சாத்தப்படுகிறது
நாளை (20-ந்தேதி) அதிகாலையில் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் பந்தளம் ராஜபிரதிநிதி மட்டும் தரிசனம் செய்வார். அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு அதற்குரிய சாவி ராஜபிரதிநிதியிடம் ஒப்படைக்கப்படும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் 12-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்