முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் புரட்சிதலைவர் எம்ஜிஆரின் நூறாண்டு விழா பொதுக்கூட்டம் காளியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் எம்.வி.எம்.பாண்டியன் தலைமை தாங்கினார் நகரச்செயலாளர் பீர்முகமது வரவேற்றார். நிலக்கோட்டை தொகுதி செயலாளர் கனகதுரை, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் மோகன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் துரைராஜ், பேரூர் செயலாளர்கள் பட்டிவீரன்பட்டி ராஜசேகரன், சேவுகம்பட்டி மாசானம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னக்களஞ்சியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீ.சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அவர் கூறும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் சிறு தப்பு செய்தாலும் நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம் தங்கள் தவறை திருத்தி கொண்டு மன்னிப்பு கோர சின்னம்மா சசிக்கலா மூலம் தான் பேசுவார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பேச அதிமுக தொண்டர்களுக்கு வழக்கறிஞராக செயல்பட்டவர். அம்மா தனக்கு ஏதாவது வேண்டும் என்றால் சின்னம்மாவைதான் கேட்பார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது கூட உணவு சாப்பிட சசிக்கலாவைதான் கூப்பிட்டார்கள். அப்போதே சின்னமாவை பற்றி குறையாக பத்திரிக்கையில் எழுதினார்கள்.

இது பற்றி கூறும் போது அம்மா எனக்கு என இருப்பவர் சின்னமாதான் என கூறினார். எனது உறவினர்கள் எல்லாம் என்னுடைய பணத்pற்காகதான் இருக்கிறார்கள். நடிகர்களின் விஜயகாந்த் இருந்தார் இவர் அதிமுகவின் மீது குற்றச்சாட்டு கூறினார் ஆனால் இப்போது பேச முடியவில்லை. திமுகவில் கருணாநிதி இருக்கும் போதே செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். ஆனால் ஒட்டுமொத்தமாக புரட்சி தலைவி அம்மா அவர்கள் அரசியல் வாரிசாக தேர்வு செய்தவர்கள் சின்னமாதான். அதிமுக கட்சி பிடிக்கவில்லையென்றால் அமைதியாக வெளியேற வேண்டும். அதை விடுத்து பொய்யான குற்றம் சாட்டுவது இருக்க கூடாது என பேசினார். பொதுக்கூட்டத்தில் அதிமுக வின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயக்குமார், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தங்கத்துரை, சிறப்புரையாற்றி பேசினார்கள். பொதுக்கூட்டத்தில் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், விஎஸ்சேகர், தண்டபாணி, மற்றம் அவைத்தலைவர் உதயக்குமார், ஒன்றிய மீனவரணி செயலாளர் ரத்தினம், தலைமை கழக பேச்சாளர் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் அழகுமலை, அரசு வழக்கறிஞர் ராணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்லப்பாண்டி, ரஞ்சித்குமார், ஜெயபாண்டி, பிச்சால், நகர வங்கி தலைவர் ஜெயபிரகாஷ், கருப்பாயிசந்திரன், டீக்கடை பிச்சை, தவசிச்செல்வம், ஜெயபாண்டி, பாண்டிராதா, தட்டிமுருகன், சதீஸ்குமார், முத்தையா, கவுன்சிலர்கள் ஹபீப்;ராஜா, செல்லத்துரை, முத்துச்சாமி, நாகராஜன், இளங்கோ, மற்றும் மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட முடிவில் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் கேக்கை அமைச்சர் சீனிவாசன் வெட்டினார். சிறுபாண்மை குழு தலைவர் ஜான் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்