முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிகட்டுக்கு விதித்த தடையை நீக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் பொதுமக்கள் பல்வேறு போராட்டம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மீனவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர்கள் ஊர்வளம்,உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் நேற்று ஈடுபட்டனர்.

  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.இதனால் தமிழர்களின் வீர விளையாட்டை முடக்கும் விதமாக நீதிமன்றம் விதித்துள்ள தடையை கண்டித்தும்,இதனை கண்டித்தும் ஜல்லி கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கோரியும்,தமிழக அரசு உடனடி அவசர சட்டத்தை நிறைவேற்ற நடவடக்கை எடுக்க கோரியும் ராமேசுவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும்,அனைத்து அரசியல் கட்டியினரும்,ஆட்டோவாகனம் ஓட்டுநர்களும்,தமிழர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியிலிருந்து ஊர்வளமாக புறப்பட்டு ஏராத்தாள 3 கி.மீட்டர் தொலைதூரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையம் பகுதி்க்கு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டு வந்து சேர்ந்தனர். பின்னர் பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு ராமேசுவரம் பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஆதரவு அளித்தனர்.அதுபோல ராமேசுவரம் பகுதியிலுள்ள  ஜவுளிக்கடைகள், சங்கு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள்,தங்கு விடுதிகளை சேர்ந்த ஊழியர்கள், மத்திய,மாநில அரசுகளை நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களும்,பெண்களும்,சிறுவர்களும் ஆதரவு அளித்து கலந்துகொண்டனர். அதுபோல தமிழர் மாணவர் இயக்கம் சார்பாக பேருந்து நிலையம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக உண்ணா விரதபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தால் ராமேசுவரம் பகுதியில் ஆட்டோ வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களை சேர்ந்த ஓட்டுநர்களும்.உரிமையாளர்களும் ஆதரவு அளி்ககும் வகையில் வாகனங்களை இயக்காமல் நிறுத்தப்பட்டனர்.இதனால் ராமேசுவரம் பகுதிக்கு வந்த பக்தர்கள் வாகனம் இல்லாமல் மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் பயணம் செய்தனர்.
  
 ஜல்லிக்கட்டு தடையை நீக்கும்வரை மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு:
 
  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று ராமேசுவரம் துறைமுக வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மீனவ சங்க தலைவர்கள் தடையை நீக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உரையாற்றினார்.இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கும் வரை தமிழர்க இளைஞர்களின் உணர்வுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று சனிக்கிழமை முதல் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து உள்ளதாக அறிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்