முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி நகரில் கல்லூரி மாணவர்கள் 2ம் நாளாக ஜல்லிகட்டை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

கள்ளக்குறிச்சி

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றனர். அதே போல் கள்ளக்குறிச்சி, சின்னசேலம பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்துகின்றனர். கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக 2ம் நாள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்..

தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை இரவு கொட்டும் பனியைகூட பொருட்படுத்தாமல் மாணவர்கள் ஆர்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமமை கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டதால் அதிகப்படியான மாணவ மாணவிகள் அச்சிட்ட வாசங்களை அட்டையில் ஒட்டியும் கோஷமிட்டவாறும் ஆர்ப்பாட்டத்தில் மாணவிகளும் ஈடுபட்டு வருகின்றனர். பீட்டா அமைப்பினை தடை செய்ய வலியுறுத்தியும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஆதராக கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்ட்த்தில் பங்கேற்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளித்தனர். மாணவர்களுக்கு தண்ணீர் உணவு பல்வேறு அமைப்பினர் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் சு. குப்புசாமி, காவல் ஆய்வாளர் மு.பாண்டியன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையினை ஏற்றுக் கொள்ளவில்லை. போலீஸார் மாணவர்கள் அமரும் இடத்திற்கு போலீஸ் பாதுகாத்து அளித்து வருகின்றனர்.   கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூரில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வந்த டவுன்பஸ்ஸை அப்பகுதி மாணவர்கள் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களை சமாதானப் படுத்தி போக்குவரத்தினை சீர் செய்தனர்.

கள்ளக்குறிச்சி  மந்தைவெளி திடலில் ஒரு பகுதியினர் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் லட்சுமி கல்லூரி மாணவர்கள் சேலம் சென்னை நெடுஞ்சாலையின் ஓரமாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னசேலம் பேருந்து நிலையத்திலும் அப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago