முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவிலான மகளிர் ஆக்கி போட்டிகள்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மகளிர் சப்-ஜுனியர் ஆக்கி போட்டிகளில் ஜார்கண்ட் மாநில ஆக்கி அணி சாம்பியன் பட்டத்தினை தட்டி சென்றது.

      ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆக்கி சங்கமும், ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி சங்கமும் இணைந்து சப்-ஜுனியர் மகளிர் ஆக்கி போட்டிகளை கடந்த 4-ந் தேதி முதல் நடத்தியது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 அணிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளின் அரை இறுதி போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இதில் உத்தரபிரதேச அணியை அரியானா மாநில ஆக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதேபோல மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜார்கண்ட் மாநில ஆக்கி அணி சண்டிகர் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று மாலை இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் அரியானா மாநில அணியும், ஜார்கண்ட் மாநில அணியும் சம பலத்துடன் மோதிக்கொண்டதில் குறிப்பிட்ட நேரத்தில் இருஅணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தன. இதனை தொடர்ந்து ஷீட் அவுட் முறையில் வெற்றியை நிர்ணயிக்க முடிவு செய்யபட்டது. இதில் ஜார்கண்ட் மாநில அணி 5-4 என்ற கோல் கணக்கில் அரியானா மாநில அணியை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
     போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் செல்லத்துரை அப்துல்லா கலந்து கொண்டு வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஆக்கி சங்க செயலாளர் ரேணுகா லெட்சுமி, ராமநாதபுரம் டாக்டர் அரவிந்தராஜ், மதுரம் அரவிந்தராஜ், வேலுமானோகரன், செய்யதம்மாள் அறக்கட்டளை நிர்வாகி செய்யதா அப்துல்லா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் பிலிப், கோவிந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆக்கி இந்தியா நிர்வாகி பூபேந்தர் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பேசினார். விழாவில், சாம்பியன் பட்டம் வென்ற ஜார்கண்ட் மாநில அணிக்கு கலெக்டர் நடராஜன் பரிசுக்கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.

    இந்த போட்டிகளில் சிறந்த ஆட்ட வீராங்கணையாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கீதாகுமாரியும், சிறந்த ஆட்ட பாதுகாவலர் விருதினை அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரீத்தியும், தொடர் ஆட்ட வீராங்கணை விருதினை அரியானா மாநில அணியை சேர்ந்த ரீத் என்பவரும், சிறந்த கோல் கீப்பருக்கான விருதினை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கல்யாணி கிண்டோவும் என்பவரும் பெற்றனர்.  

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago