முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாபாரதி அமைப்பின் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

மண்டபம்,--ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் சேவபாரதி அமைப்பின் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சேவாபாரதி தென்தமிழ்நாடு அமைப்பின் சார்பில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவையொட்டி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததானம் வழங்குதல் மற்றும் கண்தானம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆத்மஜோதி சேவை மையம் நிறுவனர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆனந்த் அசோசியோசிஸ்ட் உரிமையாளர் ஆனந்தன், உச்சிப்புளி பேட்மிட்டன் கிளப் ஒருங்கிணைப்பாளர் செல்வம், ராமநாதபுரம் கிழக்கு அரிமா சங்க துணை தலைவர் வேணுகோபால், பொருளாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், உச்சிப்புளி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துக்குமார், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கண்மருத்துவர் டாக்டர் கோவிந்தன், உச்சிப்புளி சுகாதார ஆய்வாளர் மகேந்தரன், ராமேசுவரம் சேவாபாரதி கோட்ட செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த முகாமில் உச்சிப்புளி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், பா.ஜ.க. மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், சேவாபாரதி மாநில இணை அமைப்பாளர் முனியசாமி, பாரதி பண்பாட்டு கழக பொருளாளர் கணேசன், சேவா பாரதி மாவட்ட பொறுப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முடிவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உச்சிப்புளி சாமிநாதன் நன்றி கூறினார். இந்த முகாமில், 20 பேர் ரத்த தானம் செய்தனர். 30 பேர் கண்தானம் செய்வதற்காக விண்ணப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேவாபாரதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்