முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளதா என போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 மதுரை,- மதுரையில் 28வது சாலை பாதுகாப்பு வாரவிழாவின் 4ம் நிகழ்ச்சியன்று மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை சிட்டம்பட்டி சுங்கச்சாவடி வழியாக செல்லக்கடிய வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதனை அகற்றும் பணியும், கனரக மற்றும் குறைவேக வாகனங்கள் சாலையின் இடது புறமே செல்ல வலியுறுத்தியும், சிறப்பு வாகனத்தணிக்கை மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர் வா.பாலன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மதுரை (தெற்கு) எம்.சிங்கார வேலு, மதுரை நடுவம் ஜே.கே.பாஸ்கரன் மதுரை வடக்கு கி.கல்யாணக்குமார், செயலாக்கம் என்.ரவிசந்திரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, 19 வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய

ஏர்ஹாரன் இருப்பது கண்டறியப்ப்டு அகற்றபட்டது. கனரக மற்றஉம் குறைவேக வாகனங்கள் சாலையின் இடது புறமே செல்ல வலியுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது ஆவணங்கள் இல்லாதது, வரி செலுத்தாதது ஆகிய காரணங்களுக்காக 2 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.47 ஆயிரத்து 600 இணக்க கட்டணமும் அபராத தொகையாக ரூ.37 ஆயிரத்து 700ம் வரியாக ரூ. ஆயிரத்து 900ம் அரசுக்குவருவாயாக வசூலிக்கப்பட்டது. மேலும் இடது புறமே செல்க என ஸ்டிக்கர் ஓட்டுனரின் பார்வையில் படும்படி ஒட்டப்பட்டது. சாலை பாதுகாப்பு வாரவிழா துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago