முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச கண் பரிசோதனை முகாம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி - தேனியில் 28வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த 19ம் தேதி வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு  ஊர்வலம் நடைபெற்றது. இவ்விழாவின் நிறைவு நாளான நேற்று தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் துவக்கி வைத்தார். வாகன ஆய்வாளர்கள் தியாகராஜன், இளங்கோ முன்னிலை வகித்தனர். இம்முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தும், உரிய ஆலோசனைகளையும் பெற்றனர். இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கினர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்