முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      புதுச்சேரி

சிதம்பரம்,

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நூலக அரங்கில் நடைபெற்றது. ACT சங்கத்தின் தலைவர் சமன்த் துவக்கவுரை வழங்கி விழாவினை துவக்கி வைத்தார். அறிவியல் புல முதல்வர் பரதன் சிறப்புரையும், வேதியியல் துறைத்தலைவர்

 

கபிலன் தலைமையுரையையும் வழங்கி விழாவை சிறப்பித்தனர். இந்த தேசிய அளவிலான வேதியியல் கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் பல பேராசிரியர்களும், வேதியியல் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கருத்தரங்கின் நிறைவு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் முதன்மையுரை வழங்கி சிறப்பித்தார். ராயல் சொசைட்டியின் (RSC) தென்மண்டல செயலாளர்

 

பாலசுப்ரமணியன், மொழியியல் புலமுதல்வர் திருவள்ளுவன் மற்றும் வேதியியல் துறைத்தலைவர் கபிலன் அவர்களும் விழாவில் சிறப்புரை வழங்கினர். வேதியியல் துறையின் பேராசிரியரும், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளருமான சாந்தி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்