முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி.- தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடாசலம், கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம்; ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-25-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவதன் நோக்கம் இந்திய தேர்தல் ஆணையத்தின் சுலபபதிவு, சுலபதிருத்தம் போன்ற வாசகங்களின் அடிப்படையில், பொதுமக்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கும், வாக்களிப்பதன் அவசியம், வாக்குகளின் மதிப்பு ஆகியவற்றை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் தங்களது குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்காளர் பட்டியல்களில் தகுதியுள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு அடிப்படை உரிமைகளுக்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்திலுள்ள ஐந்து வட்டங்களில் பல்வேறு

துறைகளின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் .ந.வெங்கடாசலம், தெரிவித்தார். இப்பேரணி பி.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டு நேரு சிலை வரை நடைபெற்றது. பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் கடமை மற்றும் உரிமை குறித்து முழக்கமிட்டவாறு சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.இரா.ஆனந்தி தேனி வட்டாட்சியர் ஷேக்ஆயூப் தேர்தல் வட்டாட்சியர் திருமதி.சத்;தியபாமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago