முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய வாக்காளர் தின

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்- மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தின விழா-2017 விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்.இ.கா.ப.,  முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர்சிவஞானம் தலைமையில்  நடைபெற்றது.
 இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில்,
 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கம் தேர்தல் ஆணையம். இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக 2011ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஏழாவது தேசிய வாக்காளர் தினமாகும். இந்திய ஜனநாயகத்தினை வலிமையாக்க 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட வேண்டும். தகுதிபடைத்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று அனைவரும் சுதந்திரமாகவும், மனசாட்சிப்படியும், பிறரிடம் எதையும் எதிர்பாராமல் வாக்களித்து வலுவான ஜனநாயகத்தினை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. வாக்குகள் துப்பாக்கி தோட்டாக்களை விட வலிமையானது. தங்கள் இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள மற்றும் தங்கள் இல்லங்களில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து ஜனநாயக கடமை ஆற்ற முன்வர வேண்டும்.

18 வயது பூர்த்தியான அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்களும், மாணவ மாணவியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இணையதளம் வாயிலாகவும், 18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொள்ளலாம். வாக்காளர்களாக பதிவு செய்தல், பெயர் மாற்றம் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும், மிக எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை அலைபேசியிலிருந்து ‘1950” என்ற எண்ணிற்கு அனுப்பினால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கான விவரங்களை குறுந்தகவலாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
 இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் மாவட்டத்தில் இன்று (25.01.17) தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தகுதிபடைத்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் தங்கள் கருத்துக்களை நாம் சுதந்திரமாக பதிவு செய்யலாம். தங்களுக்கு வாக்குரிமை இருந்தால் நல்ல நேர்மையான நபரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தலின் போது அனைவரும் தவறாது தங்களது வாக்குகளை பதிவு செய்திட வேண்டும். வாக்காளர்களின் வாக்குகள் ரகசியம் காக்கப்படும் எனவே, வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடுக் வேட்பாளர்களின் விபரங்களை நன்கு அறிந்து பயம் இல்லாமல் வக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தேசிய வாக்காளர் தினவிழாவில், மாவட்ட அளவில் சிறப்பாக பணிபுரிந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சட்டமன்ற தொகுதிவாரியாக சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், வாக்காளர்கள்  விழிப்புணர்வு குறித்த மாவட்ட, கோட்ட, வட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி, கலை நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும்,  வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம்.இ.ஆ.ப., ;; வழங்கினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியினை  எடுத்துக் கொண்டனர்.

பின்னர், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை வாக்களர்களிடம் ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துக்குமரன்  விருதுநகர் கருமாதி மடம் அருகில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகளில் சென்றது.

இவ்விழாவில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்;ச்சி முகமை) சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர்புகழேந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)பூமி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கிருஷ்ணம்மாள், கல்லூரி தாளாளர் வெங்கட இராமானுஜதாஸ், தேர்தல் வட்டாட்சியர் ஸ்ரீதர் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்