முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

68-வது குடியரசு தினவிழா மாவட்ட கலெக்டர்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்   நடைபெற்ற 68-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடாசலம்,  தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விழாவில் கலந்துகொண்ட தியாகிகளுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவப்படுத்தி, 12 பயனாளிகளுக்கு ரூ.17,63,487- மதிப்பிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு துறைகளைச்சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
        இவ்விழாவில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது ஊனமுற்றதற்காக உதவித்தொகையாக 1 பயனாளிக்கு ரூ.25,000-த்திற்கான காசோலையினையும், சியாச்சின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிப்பொழிவில் சிக்கி வீர மரணமுற்ற படைவீரரின் உதவித்தொகையாக 1 பயனாளிக்கு ரூ.50,000-த்திற்கான காசோலையினையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் பொருளாதார முன்னேற்ற கழகத்தின் (தாட்கோ) சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.16,07,212- மதிப்பிலான டிராக்டர் வாகனத்தினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.42,000- மதிப்பிலான சுழல் கலப்பையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.6,000- மதிப்பிலான விசைத்தெளிப்பான் கருவிகளையும்,1 பயனாளிக்கு ரூ.2,000- மதிப்பிலான நிலக்கடைல மின்கிட்டினையும், தோட்;டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.10,000- மதிப்பிலான தக்காளி நாற்றினையும், 1 பயனாளிக்கு ரூ.6,875- மதிப்பிலான பெருநெல்லியினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நவீன காதொலி கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.14,400- மதிப்பிலான காதொளி கருவிகளையும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.17,63,487- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், மேலும் வருவாய்த்துறையின் சார்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்ந.வெங்கடாசலம்,  வழங்கினார்.
   மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 27 காவல் துறையினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும், சிறப்பாக பணி புரிந்த  பல்வேறு துறைகளைச் சார்ந்த 119 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் 700க்கும் மேற்பட்ட 7 பள்ளிகள்; மற்றும் கோடாங்கிபட்டி மனித நேயக்காப்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
        இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வீ.பாஸ்கரன் தேனி பாராளுமன்ற உறுப்பினர்ஆர்.பார்த்திபன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் சட்டமன்ற உறுப்பினர்கள்தங்க தமிழ்செல்வன்எஸ்.டி.கே.ஜக்கையன் மரு.கே.கதிர்காமு மாவட்;ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.மாலதி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்சந்திரசேகரன் வேளாண்மைத்துறை இணை இயக்குநர்மூர்த்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)ஞானசேகரன் தனித்துனை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)தாமஸ்பிரிட்டோ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்வாசு வருவாய் கோட்டாட்சியர்கள்;ரவிச்சந்திரன் செல்வி.இரா.ஆனந்தி மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்ச.தங்கவேல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்ராஜேந்திரன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)வடிவேல் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)சேதுராமன் உட்பட அனைத்து மாவட்ட அளவிலான அலுவலர்கள், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏரளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்