முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோக், பெப்சி விற்க அனுமதிக்ககூடாது

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

  தேனி - பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. லெட்சுமிபுரம் கிராமசபை கூட்டத்தில் கோக், பெப்சி விற்க அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
  கீழவடகரை ஊராட்சி : கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயலர் கணபதி தீர்மானங்களை வாசித்தார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் மேற்பார்வையிட்டார். 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு வழங்கும் மானியத்தொகையை பயன்படுத்தி வீடுகளில் கழிப்பிடம் அமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
   எண்டப்பளி ஊராட்சி : எண்டப்புளி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (ஊராட்சி) பாரதமணி மேற்பார்வையிட்டார். செயலர் ஜெயபாண்டி தீர்மானங்களை வாசித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முருகமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடம் தரமில்லாததாக இருப்பதாக கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தீர்மானம் இயற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.எஸ்.ஏ அலுவலருக்கு அனுப்பி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ரேஷன் கடைகளில் கார்டுகளுக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை. எனவே ரேஷன் கடையிலிருந்து பில்புக்கை கிராமசபை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றனர். ஆதனை தொடர்ந்து ரேஷன்கடை பில்புக் சமர்ப்பிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. தண்ணீர் பிரச்னையை தீர்க்க புதிய ஆழ்துளை குழாய் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குப்பைகளை அகற்ற புதிய டிராக்டர் வாங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

  மேல்மங்கலம் ஊராட்சி : மேல்மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் கோபாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலர் கலைச்செல்வி மேற்பார்வையிட்டார். 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 ஜல்லிபட்டி ஊராட்சி : ஊராட்சி ஒன்றிய அலுவலர் தர்மராஜ் மேற்பார்வையில் நடைபெற்ற ஜல்லிபட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் செயலர் கோபால் தீர்மானங்களை வாசித்தார். சிறப்பு தீர்மானங்களாக  மானியத்துடன் கூடிய தனி நபர் கழிப்பறையை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 127 பேர் கலந்து கொண்டனர்.
 லெட்சுமிபுரம் ஊராட்சி : லெட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மைதிலி மேற்பார்வையிட்டார். செயலர் லெனின் தீர்மானங்களை வாசித்தார். 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் இப்பகுதியில் பெப்சி, கோக் விற்க அனுமதிக்க கூடாது என மனு வழங்கப்பட்டது.
 அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிகூடம், தாய்திட்டம், மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்