முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டு தடைக்கு முன்பே புதிய ரூபாய் நோட்டு வடிவமைப்புக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - ரூபாய் நோட்டு தடை செய்வதற்கு 5 மாதங்களுக்கு முன்பே புதிய ரூபாய் நோட்டு வடிவமைப்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய நோட்டுகள் அறிமுகம்
உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8 -ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. திரும்ப பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ. 500, 2000 ஆயிரம் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

பணத்தட்டுப்பாடு
கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பை முறைப்படுத்த மத்திய அரசு புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய்களை திரும்ப பெற்றதால் நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு நிலவியது.  பிரதமர் மோடி மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஆரம்பத்தில்  வரவேற்பு இருந்தாலும் பணத்தட்டுப்பாடு நிலவி மக்களை கடும் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதால், கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது.

ரிசர்வ் வங்கி பதில்
இந்த நிலையில், பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.எடி.டிவி ரிசர்வ் வங்கிக்கு ரூபாய் நோட்டு தொடர்பாக சில தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு விண்ணப்பித்து இருந்தது. இந்த கேள்விகளுக்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, புதிய ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கான வடிவமைப்புக்கு ஜூன் 7-ம் தேதியே மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, புதிய ரூபாய் நோட்டு வடிவமைப்புக்கு மே 19-ம் தேதி ஒப்புதல் தெரிவித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், புதிய ரூ.500,2000 தாள்கள் அச்சிடுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதற்கு கணக்கீடு எதுவும் மேற்கொள்ளப்பட்டதா? என்ற  கேள்விக்கு பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்