முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 5 லட்சம் மாணவர்களுக்கு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தமிழகத்தில் இந்த ஆண்டு 5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.890 கோடியில் மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ரூ.27.71 லட்சம் மதிப்பில் 163 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். ஆப்போது அவர் பேசியதாவது:-  மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  மாணவ, மாணவியர்களின் நலனை மேம்படுத்திடும் விதமாக 14 வகையான மாணவர் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  குறிப்பாக வசதி படைத்தவர்களின் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிக்கணினிகளை, சாமானிய ஏழை, எளியவர்களின் குழந்தைகளும் பயன்டுத்தி புதிய தொழில்நுட்பங்களை கற்றறிந்து உலகத்தரத்திலான கல்வியினை பெற்றிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் முழுமையாக செயல்படுத்த இயலாத திட்டமான இத்திட்டத்தின் கீழ்  தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பில் ஏறத்தாழ 33 லட்சம் மாணவ மாணவியர்கள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளைப் பெற்று பயனடையும் வகையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதுதவிர மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 5லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.890 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர்கள்  விலையில்லா மடிக்கணினிகளை பயன்படுத்தி உலகத்தரத்திலான கல்வியினை பெற்று பயனடைய வழிவகை செய்கின்றது.  தமிழ்நாடு அரசு மாணவ மாணவியர்களின் நலனில் அக்கறைக்கொண்டு செயல்படுத்தி வரும்  பல்வேறு மாணவர் நல திட்டங்களை மாணவ மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

இவ்விழாவில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.யூசுப் சாகிப், இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகீம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர்.அ.அலாவுதீன் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்