முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து டிஜிட்டல் கருவி மூலம் ஆய்வு.

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

    ராமேசுவரம்,-  ராமேசுவரம் தீவு மற்றும் பாம்பன் ஆகிய கடலோரப்பகுதிகளில் கடலின் தன்மை குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வுப்பணிகள் நேற்று நடைபெற்றது.

  தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு கடலில் பல விதமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியான ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் அடிக்கடி கடல் உள்வாங்குவதும், கடல் கொந்தளிப்பது போன்ற நிகழ்வுகள் அவ்வொப்போது நடைபெறுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு  சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள கடலோர பகுதிகளில்  கடலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கடல் அலையின் வேகம், கடல் நீர் மட்ட உயர்வு, குறைவு உள்ளிட்டவைகள் குறித்து அவ்வொப்போது  மத்திய சர்வே ஆப் இந்தியா குழுவின் சார்பில் ஆய்வு மேற்கொண்டு வந்தது.அதன் பேரில் வேதாளை,ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.இதைனை தொடர்ந்து இத ஆய்வுப்பணிகள்  பாம்பன் சாலைப்பாலம் பகுதியிலிருந்து டிஜிட்டல் ஜியாக்ரபி பொசிசனிங் சிஸ்டம் என்ற அதிநவீன டிஜிட்டல் கருவி மூலம் பாம்பன் கடலில் உள்ள நீர் மட்ட உயரம், கடல் அலையின் வேகம், கடற்கரை பகுதியில் எது வரையிலும் கடல் நீர் அதிகரித்துள்ளது உள்ளிட்ட ஆய்வுப்பணிகள் நேற்று நடைபெற்றது.
 இது குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தது:

   மத்திய அரசின் சர்வே ஆப் இந்தியா துறை மூலம் சென்னை முதல் தூத்துக்குடி வரையிலும் பல குழுக்களாக பிரிந்து கடலோர பகுதிகளில் ஆய்வு செய்து சர்வே எடுத்து வருகிறது. தூத்துக்குடி முதல் ராமேசுவரம் வரை சர்வே எடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இந்த சர்வேயில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம், கடல் அலையின் வேகம், கடல் நீர் மட்டத்தின் உயரம், குறைவு உள்ளிட்டவைகள் டிஜிட்டல் கருவி மூலம் பதிவு செய்யப் படும். அது போல் கருவி மூலம் பதிவு செய்யப்படும் இடமானது ஜி.பி.எஸ். கருவியில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பாம்பன் அருகே உள்ள நடுக்கடலில் உள்ள சிங்கிலிதிவு, குருசடைதீவு, மனோலிதீவு, முயல்தீவு உள்ளிட்ட தீவு பகுதிகளிலும் ஆய்வு செய்து சர்வே எடுத்து முடித்துள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் தனுஷ்கோடி வரை இந்த பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்