முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.சி. அறையும், குளு, குளு ஆபத்தும்!

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவு கொண்ட அறையில் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏசி போட்டு தூங்குகிறார்கள். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து விடும்.

பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது 10 சதவீதத்திற்கும் கீழே குறைகிறது. அப்போது நுரையீரலால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.

அது நம் உடலிலுள்ள தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. தண்ணீரில் இரு மடங்கு ஆக்சிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் இருக்கிறது. இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது. அதனால்தான் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்று அழைக்கிறார்கள்.

சிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன் அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது. நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவுநீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன் ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்கள் அதிகரிக்கின்றன. மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகிறது. சிறுநீரகத்திலும் இது படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மூட்டு வலி தோன்றுகிறது.

ஏசி அறையில் இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது இத்தனை உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் ‘காற்றுத் தீட்டு‘ என்று அழைத்தார்கள். காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைக்கும்போது கொசுத்தொல்லை இருக்கும். அதற்கு ஜன்னல்களில் கொசுவலை அடிக்கலாம். ஆக, காற்றுத்தீட்டு இல்லாத காற்றோட்டமான அறையில் தூங்குவோம். ஆரோக்கியத்தை பேணுவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்