முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை.ஜன.  மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  .கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.
  இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 31 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 13 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 04 மனுக்களும், முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 154 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 12 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 05, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 04 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 07 மனுக்களும்;, ஓய்வூதியம் நிலுவைத்தொகை மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடர்பாகவும், தொழிலாளர் நல வாரியம் தொடர்பாகவும் 04 மனுக்களும் மற்றும் இதர 52 மனுக்களும் என மொத்தம் 286 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
 இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில், மதுரை வடக்கு வட்டத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 2 நபர்களுக்கு விதவை உதவித்தொகையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 14 நபர்களுக்கு தலா ரூ.5,300 மதிப்பில் என மொத்தம் ரூ.74,200 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 1 நபருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையினையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 6 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 
        இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சி.இந்திரவள்ளி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்