முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பல்லவராயன்பட்டியில் 12.02.2017 அன்றும் அய்யம்பட்டியில் 19.02.2017 அன்றும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, பிறதுறை அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசின் உத்தரவின்படி, மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை, இணை இயக்குநர் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப்பணிகள் ஆகியோ உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவும், கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர் உத்தமபாளையம், காவல் துணை கண்காணிப்பாளர் போடிநாயக்கனூர், உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை உத்தமபாளையம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஆகியோர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

                  ஜல்லிக்கட்டு நடைபெறும் தினத்தன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்குள் நடத்திடவும், கால்நடை பராமரிப்புத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ஒப்புதல் அளிக்கும் காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். காளைகளை பிடிப்பதற்கு பதிவு செய்யப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் போதைப்பொருள்ஃஊக்கமருந்து உட்கொண்டிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுகாதாரத் துறையினர் முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி முக்கிய மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் தயார் நிலையில் வைத்திடவும், உள்ளாட்சித்துறையினர் குடிநீர், கழிப்பாறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், பொதுப்பணித்துறையினர் பாதுகாப்புக்காக 8 அடி உயரத்தில் கம்பிவலை பின்னப்பட்ட இரட்டை தடுப்பு வேலிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்து தகுதிச்சான்று, பார்வையாளர்கள் அமருமிடம் மற்றும் அமைக்கப்படவுள்ள மேடைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதனை ஆய்வு செய்து சான்று வழங்கிடவும், காளைகள் பார்வையாளர்களுக்கு தீங்களிக்கா வன்னம் வேலி அமைப்பதை ஆய்வு செய்திடவும், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைத்திடவும், விழா குழுவினர்களால் மாடுபிடி வீரர்களுக்கு பிரத்தியேகமான ஆடைகள் வழங்கிடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு

வினர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.குமரவேல் இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) அசோகன் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சண்முகசுந்தரம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் வட்டாட்சியர் குமார் துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்