முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

  தேனி - மறைந்த முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டும், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 69வது பிறந்த நாள் நினைவாகவும், ஏழை மாணவர்கள் மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ தேர்வுகள் மற்றும் தமிழக அரசு தேர்வாணையம் மூலம் நடைபெறும் குரூப் 8 மற்றும் சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்களின் ஏற்பாட்டில்  உத்தமபாளையம் ஜெ.ஜெ மஹாலில் பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

                 இப்பயிற்சி வகுப்பு ஆரம்ப விழா   கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எஸ்.டி.கே ஜக்கையன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்புகளை  துவக்கி வைத்தார். அவர் பேசும்போது இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வசதிக்காக திறமையான ஆசிரியர்களை கொண்டு துவக்கப்பட்ட இப்பயிற்சியை அனைவரும் முறையாக பயன்படுத்தி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இம்மையத்திற்கான இடவசதியை உத்தமபாளையம் ராமையா செய்து கொடுத்தார். சுப்பிரமணியன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் பயிற்சி கொடுக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்