முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50க்கும் மேற்பட்ட மின்-மோட்டார்கள் பறிமுதல்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் குடிநீர் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மின்மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு:

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமானோர் சட்டவிரோதமாக மின்மோட்டார்களை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக குடிநீரை திருடி வருவதாக திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின் பேரில் நகராட்சி பொறியாளர் சக்திவேல் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் திருமங்கலம் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

குடிநீர் திருட்டு மின்மோட்டார்கள் பறிமுதல்:

அப்போது அனந்தன்தெரு,திருவள்ளுவர்தெரு,உத்தண்டன்தெரு,ரோஜாதோட்டம்,ஜவஹர்நகர்,குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று சோதனை நடத்தியதில் நகராட்சி குடிநீர் இணைப்பில் மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர். இதையடுத்து மின்மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் திருட்டிடும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி பொறியாளர் சக்திவேல் எச்சரிக்கை விடுத்ததுடன் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதனிடையே திறந்த வெளியில் மலம் கழித்தால் சற்று புதுமையாக பூரணகும்ப மரியாதை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதற்கட்டமாக ரூ.100முதல்ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago