முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் அண்ணா நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டது. போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் அண்ணா நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா சசிகலா மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் அண்ணாவின் நினைவுநாளை கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் அண்ணாவின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு இடங்களில் அண்ணாவின் நினைவுநாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம் போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் செயலாளர் தமிழ்செல்வம் ஏற்பாட்டின்பேரில் அண்ணா நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. ராமநாதபுரம் புறநகர் கிளையின் நுழைவுவாயிலில் அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்